சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் சந்தீப் கிஷன், ‘மாநகரம்’, ‘மாயவன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனித்துவமான வரவேற்பைப் பெற்றவர். தமிழுடன் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், பான் இந்திய அளவில் வெளியான ‘மைக்கேல்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றார். ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.

தற்போது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் இயக்கி வரும் ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மூலம் ஜேசன் இயக்குநராக அறிமுகமாக இருப்பதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அந்த திரைப்படத்திற்கு ‘பவர் பேட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 70 எம்எம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்து வருகிறார். ‘பவர் பேட்டா’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடையே வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், சந்தீப் கிஷன் திரைத்துறையில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading