திகில் கலந்த கதைக்களத்தில் உருவான ‘சாத்தான்: தி டார்க்’ !

திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கியுள்ளார். இபிஎஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எட்வர்ட் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். நடிகைகள் ஐரா, சாந்தினி தமிழரசன் மற்றும் நடிகர் எஃப்.ஜே. ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

‘அஸ்தினாபுரம்’ என்ற மலை கிராமத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், அங்கு நடைபெறும் மர்மமான கொலைகள் மற்றும் சாத்தான் வழிபாடு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. திகில் நிறைந்த சம்பவங்கள் மற்றும் மர்ம பின்னணியுடன் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘சாத்தான்: தி டார்க்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் அங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading