நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் செயற்பட்டு வரும் எம்.எஸ். பாஸ்கர், சமீபத்தில் தனுஷ் நடித்த ‘கர’ திரைப்படத்தில் முதியவர் வேடத்தில் நடித்துள்ளார். அவரின் தோற்றம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்ததால், அது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரை அடையாளம் காண முடியாத அளவுக்கு அவரது மேக்கப் மற்றும் நடிப்பு மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து எம்.எஸ். பாஸ்கர் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை இயக்குநர் சொல்லும் விஷயங்களை முழுமையாக ஏற்று செய்வேன். நல்ல கதைக்காக எந்த அளவிற்கும் செல்லத் தயார். அதன்படியே கர படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் நடித்தேன். என் குரலையும் மாற்றி நடித்தேன்.
நான் யார் என்பதை ரசிகர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் அந்த கதாபாத்திரத்தை ரசித்தாலே போதும். அதிலேயே எனக்கு திருப்தி கிடைக்கும். அதுதான் என் சினிமா பயணம்,” என்று தெரிவித்தார்.
