வாழை படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குகிறாரா மாரி செல்வராஜ்? வெளியான புது தகவல்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகி, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட அதன் உணர்ச்சி மிக்க கதையால் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக உண்மைகளை நெருக்கமாக பதிவு செய்த இந்த படம், விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்திலும் சிறந்த இடத்தைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய ‘பைசன்’ திரைப்படமும் வெற்றி பெற்றதால், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாரி செல்வராஜ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இதுவரை அவர் இயக்கிய எந்த திரைப்படமும் தோல்வியடையாததால், தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கும் இயக்குநராகவும் அறியப்படுகிறார்.

அடுத்ததாக, தனுஷ் நடிப்பில் ஒரு வரலாற்று திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன் ‘வாழை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணத்தில் அவர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷுடன் பணியாற்ற பல இயக்குநர்கள் காத்திருப்பதால், இந்த இடைவெளியை பயன்படுத்தி ‘வாழை 2’ படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading