மூன்றே மாதங்களில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் !

94 வயதிலும் உற்சாகமாக திரைப்படங்களை உருவாக்கி வரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ், தமிழ் சினிமாவில் திக்கற்ற பார்வதி, ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல முக்கியமான படங்களை இயக்கி வெற்றிகரமாக திகழ்ந்தவர். தனது தனித்துவமான கதை சொல்லும் முறையாலும், பல்வேறு ஜானர்களில் வெற்றி கண்ட திறமையாலும் அவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளார்.

அவரது இயக்கத்தில் தெலுங்கு மொழியில் உருவாகும் புதிய திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே என்பதை நிரூபிப்பதுபோல, அந்த திரைப்படத்தின் முழு பணிகளையும் வெறும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான வேகமும் அர்ப்பணிப்பும் அவரது அனுபவத்தையும், தொழில்முறை பற்றையும் வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், நேற்று இந்த புதிய படத்திற்கு ‘சிங் கீதம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், அதன் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படம், ஜூன் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை கல்கி பட இயக்குநரான நாக் அஸ்வின் தயாரிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பாகும்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading