பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் ‘கலிஃபா’… அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

இயக்குநர் வைசாக் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் ‘கலிஃபா’ திரைப்படத்தில், முன்னணி நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். பல திறமையான நடிகர்கள் இணைந்திருப்பதால், இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் பணியாற்றியுள்ளார். மேலும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்க்கிறது.

இந்த நிலையில், ‘கலிஃபா’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading