‘ஹாய் நானா’ திரைப்படத்தை இயக்கிய சவுர்யுவ், தனது அடுத்த திரைப்படமாக விஜய் தேவரகொண்டாவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஹேசம் அப்துல் வாகப் பணியாற்றவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தற்போது, இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே மகேஷ் பாபு மற்றும் பிரபாஸ் ஆகிய முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
—
