சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் ‘காவியக் காதல்’

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த ‘மாவீரன்’, ‘3பிஎச்கே’, ‘சியான் 63’ போன்ற திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தனது நான்காவது தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய படத்தில், பிரபல யூடுயூப் பாரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் ‘குடும்பஸ்தன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சான்வே மேகனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பாலா சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள புதிய படங்களில் ஒன்றாக இந்தத் திரைப்படம் பார்க்கப்படுகிறது. அறிமுக இயக்குநரான ஹரிஹரசுதன் அழகிரி இப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ரொமான்டிக் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, இந்தப் படத்திற்கு ‘காவியக் காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading