ஆர்.ஜே. பாலாஜி தனது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு ஊடகங்களுக்கு அவர் தொடர்ந்து பேட்டிகள் அளித்து வருகிறார். அத்தகைய ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்த தகவல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் கூறுகையில், எஸ். எஸ். ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் தமிழ் பதிப்பிற்கான வசனங்களை மதன் கார்க்கி எழுதியிருந்தார். அப்போது, அந்த படத்தில் அதிவி சேஷ் நடித்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று ராஜமௌலி விருப்பம் தெரிவித்துள்ளார் என மதன் கார்க்கி தனது மூலம் தெரிவித்ததாக ஆர்.ஜே. பாலாஜி கூறினார். இதை கேட்ட அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட மதன் கார்க்கி, “உங்கள் குரல் மிகவும் பிரபலமானது. அதை கேட்டவுடன் இது ஆர்.ஜே. பாலாஜியின் குரல் என்று பார்வையாளர்கள் உடனே அடையாளம் காணலாம். அது படத்தின் இயல்பான போக்கை பாதிக்கக்கூடும்” என்ற காரணத்தால், உங்களை மாற்றியமைக்க வேண்டாம் என எஸ். எஸ். ராஜமௌலி முடிவு செய்ததாக கூறியுள்ளார். இதனால் ஆரம்பத்தில் ஏமாற்றம் ஏற்பட்டாலும், பின்னர் அந்த முடிவின் பின்னணி லாஜிக் சரியானது என்பதை புரிந்துகொண்டதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
—
