மெக்சிகோவுக்கும் பாகுபலி படத்திற்க்கும் உள்ள தொடர்பு… இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி டாக்!

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ் பாபு, பிரித்விராஜ் மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் BTS காட்சிகள் Comic Con Experience MX 2026 நிகழ்வில் நேற்று மெக்சிகோவில் திரையிடப்பட்டன. மேலும், இயக்குநர் ராஜமௌலி பேசிய ஒரு வீடியோ பதிவும் அங்கு வெளியிடப்பட்டது.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: “என்னுடைய முந்தைய படமான ‘பாகுபலி’ திரைப்படத்தில், நகர மையம் மற்றும் சிம்மாசனம் போன்ற அம்சங்கள் Chichen Itza பிரமிடை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. ஆனால் மெக்சிகோவின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து எனக்கு இருந்த அறிவு மிகக் குறைவு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இப்போது, உங்களைப் போன்ற அற்புதமான மக்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இது எனக்கு உதவும் என்று நம்புகிறேன்.

நான் சுமார் 25 ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்கி வருகிறேன். ஆனால், உங்கள் கதை கடல்களை கடந்துவிட்டது என்பதை உணரும்போது, அதை எதிர்கொள்ள எதுவும் உங்களை தயார்படுத்தாது. ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி இருக்கும் மக்கள், நீங்கள் உருவாக்கிய ஒன்றைக் கண்டு சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், நடனமாடுகிறார்கள். அந்த அனுபவத்தை ‘ஆர்.ஆர்.ஆர்’ எனக்கு அளித்தது. என் நாட்டான இந்தியாவைத் தாண்டி, உலகளாவிய உணர்வுகளை எவ்வாறு சென்றடைய முடியும் என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகம் முழுவதும் பாடப்பட்டு, ஆடப்பட்டதை பார்க்கும்போது, ‘நான் திரைப்படங்களை உருவாக்குவதற்கான உண்மையான காரணம் இதுதான்’ என்று நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் Avengers: Doomsday, Spider-Man: Brand New Day, Supergirl மற்றும் House of the Dragon போன்ற திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் காட்சிகளும் திரையிடப்பட்டன. அதே நேரத்தில், ‘வாரணாசி’ தொடர்பான நிகழ்வின்போது சில பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேறியதாகவும், இதனை இன ரீதியான புறக்கணிப்பாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading