ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளை பெற்றிருந்தது.
இருப்பினும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘பவர்ஹவுஸ்’ மற்றும் ‘மோனிகா’ ஆகிய பாடல்கள் இணையத்தில் நீண்ட நாட்கள் டிரெண்டாக இருந்தன.
இந்நிலையில், ‘பவர்ஹவுஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூப் தளத்தில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. அனிருத் இசையமைப்பில், அறிவு எழுதி பாடிய இந்தப் பாடல், கடந்த ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
—
