9 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய திரையுலகின் பிரம்மாண்ட படைப்பான ‘பாகுபலி 2’ !

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி 2’ திரைப்படம், ‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் பிரபாஸ், ரானா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக சுமார் 1800 கோடி ரூபாயை எட்டியதாக கூறப்பட்டு சாதனை படைத்தது.

இந்நிலையில், ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு, ரசிகர்கள் படத்தின் முக்கிய காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் பாடல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading