‘ரேகாஸ் கபடி குழு’ என்ற படத்தை இயக்கும் நடிகையும் இயக்குனருமான மேக்னா!

சுதா கொங்கரா, கிருத்திகா உதயநிதி, ஐஸ்வர்யா ராஜினிகாந்த், காயத்ரி, ஹலீதா ஷமீம், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் சவுந்தர்யா ராஜினிகாந்த் போன்ற பெண் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் இணைந்துள்ளார் மேக்னா. இவர் இயக்குநராக மட்டுமின்றி நடிகையாகவும் செயல்பட்டு வருகிறார். ‘மலேசியாவில் 999’, ‘ஹார்பர்’, ‘லக்கி நன்’ போன்ற படங்களை இயக்கி தயாரித்த இவர் தற்போது ‘டி.வி.கே’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

தற்போது, ‘ரேகாஸ் கபடி குழு’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ், மூணாறு ரமேஷ், தேனப்பன், வினோத், ரேஷ்மா ஆகியோருடன் மேக்னாவும் நடித்துள்ளார்.

படம் குறித்து மேக்னா கூறியதாவது: “இந்த திரைப்படம் நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை மையமாகக் கொண்டு உருவாகிறது. அதில் பெண்களின் பங்கு என்ன என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லும் முயற்சியாக இது இருக்கும். இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு சிறந்த படைப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading