நடிகர் ரஜினிகாந்தை விமல் சந்தித்த போட்டோ சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலானது. இந்த திடீர் சந்திப்பு குறித்து தற்போது சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த சந்திப்பு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல தற்செயலான சந்திப்பு என கூறப்படுகிறது. சென்னையில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் ஜெயிலர் 2 வுக்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் சிம்புத்தேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்தின் டப்பிங் நடந்து கொண்டிருந்தது. இதை கேள்விப்பட்டு நடிகர் விமல் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்தார். ரஜினியும் தனது வழக்கமான் அன்பு பாணியில் கட்டி அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார், அந்த போட்டோ வைரலானது என கூறப்படுகிறது .
விரைவில் சிம்புதேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படம் பற்றிய விரிவான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
