அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘டிசி’. இதில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு அவர் ஒரு இசை ஆல்பத்தில் நடித்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் பல இயக்குநர்கள் நடிகர்களாக மாறியுள்ள நிலையில், அந்த வரிசையில் லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ளார். காதல், ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால், விரைவில் இதன் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
