‘லெனின் பாண்டியன்’ படத்தின் ‘உன்னை நம்பி’ பாடல் வெளியீடு!

சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.டி.பாலசந்திரன் டைரக்ஷனில் உருவாகும் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் இவர் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் கங்கை அமரன், நடிகை ரோஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இளையராஜா இசையமைப்பில் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ‘உன்னை நம்பி’ என்ற பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இப்பாடலை ஸ்வேத்தா மோகன் பாடியுள்ளார். முன்னதாக லெனின் பாண்டியன் படத்தின் டிரெய்லர் கடந்த 15ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading