எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் ருக்மணி வசந்த் !

தமிழில் ‘ஏஸ்’, ‘மதராஸி’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள கன்னட நடிகையான ருக்மணி வசந்த், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துவரும் ‘டிராகன்’ திரைப்படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கவுள்ள கவுதம் தின்னனூரி, முன்பதாக அந்த வேடத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்தை அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

கன்னடத்தில் வெளியான ‘சப்த சாகரலு தாட்டி எல்லா’ திரைப்படத்தில் ருக்மணி வசந்தின் சிறப்பான நடிப்பை கண்டு பிரமித்த இயக்குநர் கவுதம் தின்னனூரி, அவரை இந்த பயோபிக் படத்திற்கு தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading