ராஷ்மிகா மந்தனா ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும், மறுபக்கம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘கேர்ள் பிரண்ட்’ திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், தற்போது கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரவீந்திரன் புல்லே இயக்குகிறார். இப்படத்தில் ராஷ்மிகா, பழங்குடியினத்தைச் சேர்ந்த தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனால், இந்தப் படத்தில் அவருக்கு பல ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது கேரளாவில் உள்ள அடர்ந்த காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. குறிப்பாக ராஷ்மிகா நடித்த ஆக்ஷன் காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 15 நாட்கள் இந்த அட்டவணை நடைபெற உள்ளது. இந்த ஆக்ஷன் காட்சிகளுக்காகவே, பாங்காக் நகரத்தில் தினமும் எட்டு மணி நேரம் பயிற்சி எடுத்த பிறகே அவர் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்
