தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல டோலிவுட் நடிகை மானசா வாரனாசி…?

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மானசா வாரனாசி கவனம் பெற்று வருகிறார். பெமினா மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்ற அவர், ‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த மானசாவை தமிழ் திரையுலகிலும் அறிமுகப்படுத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இரண்டு தமிழ் திரைப்படங்களின் கதைகள் அவரிடம் கூறப்பட்ட நிலையில், அவற்றில் ஒரு கதையில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய மானசா வாரணாசி, “ஒரு நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பதே என் மிகப்பெரிய கனவு. அவர்களின் அங்கீகாரத்தை பெறுவது எளிதல்ல. அதற்காக கடினமாக உழைத்து தொடர்ந்து போராட நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading