‘மேயாத மான்’ மற்றும் ‘ஆடை’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ரத்ன குமார் எழுதி இயக்கியுள்ள புதிய படம் ‘29’ ஆகும். இந்தப் படத்தில் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் மற்றும் பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் மே 8ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் நான்காவது பாடலான ‘பொல்லாத ஆசைகள்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
—
