அல்லு அர்ஜுன் – அட்லியின் ‘ராக்கா’ படத்தில் இணையும் நடிகை பெமினா ஜார்ஜ்?

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படம், சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 600 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான முதல் பார்வை போஸ்டரில் அல்லு அர்ஜுனின் தோற்றம் மனிதன் மற்றும் மிருகம் கலந்த தோற்றமாக காட்சி அளித்தார்.

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக தீபிகா படுகோன் மற்றும் மிருணாள் தாகூர் நடித்துவருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

மேலும், இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இந்நிலையில், மின்னல் முரளி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பெமினா ஜார்ஜ் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading