புஷ்கர் காயத்ரி தயாரிப்பில், சற்குணம் கடந்த சில ஆண்டுகளாக ‘எக்சாம் தி சிஸ்டம் எக்ஸ்போஸ்ட்’ என்ற புதிய வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடரில் துஷாரா விஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் அப்பாஸ் மற்றும் அதிதி பாலன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் மற்றும் டிராமா கலந்த தொடர், உணர்ச்சி மற்றும் பதட்டம் நிறைந்த கதை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, கடந்த சில மாதங்களாக இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது, இந்த வெப் தொடர் வருகிற மே 15ஆம் தேதி முதல் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோ தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடர் தமிழில் வெளியாகுவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15க்கும் மேற்பட்ட மொழிகளில் சப்-டைட்டில்களுடன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
—
