பிரித்விராஜ் நடிக்கும் ‘கலிபா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாள சினிமாவில் பிரித்விராஜ் நடித்த ‘விலாயத் புத்தா’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது பிரித்விராஜ் ‘கலிபா’, ‘ஐ நோபடி’, ‘சந்தோஷ் டிராபி’ போன்ற மலையாள திரைப்படங்களிலும், தெலுங்கில் உருவாகும் ‘வாரணாசி’ படத்திலும் நடித்து வருகிறார். இவற்றில் ‘கலிபா’ திரைப்படத்தை ‘புலி முருகன்’ படத்தின் இயக்குநரான வைசாக் இயக்கி வருகிறார். ஏற்கனவே தனது முதல் படமான ‘போக்கிரி ராஜா’ திரைப்படத்தை பிரித்விராஜை வைத்து இயக்கிய வைசாக், சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருடன் இணைந்து இந்த ‘கலிபா’ படத்தை இயக்கி வருகிறார். இந்த கூட்டணி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், ‘கலிபா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading