அரசியல் நையாண்டி கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தை இயக்குநர் ராம்தேவ் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ரவிமரியா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ராதாரவி, பேரரசு, கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளராக துளசி ராயன் பணியாற்றியுள்ளார். மேலும், கவிதாலயா சரவணன், சந்திரசேகர், ராம்குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. அரசியல் பின்னணியில் நையாண்டி கலந்த கருத்துகளை வெளிப்படுத்தும் இந்த திரைப்படம் பார்வையாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
—
