அமர்க்களம் ரீ ரிலீஸ்… வைரமுத்து வெளியிட்ட வாழ்த்து பதிவு!

நடிகர் அஜித் குமார் மற்றும் ஷாலினி ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு, அவர்கள் இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படம் மீண்டும் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பதிவில் இந்தப் படத்தைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அவர் குறிப்பிட்டதாவது, “எப்போது வெளியானாலும் ‘அமர்க்களம்’ திரைப்படம் தனது தனித்துவத்தை இழக்காது. குறிப்பாக ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடல், மற்ற எந்தப் பாடல்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பை கொண்டுள்ளது. 89 வரிகள் கொண்ட நீண்ட பாடலாக அமைந்துள்ள இது, ஒவ்வொரு வரியிலும் புதிய உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அந்த உணர்வுகளை புயல்போல் வெளிப்படுத்திய அஜித்தின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தை இயக்கிய சரண் மற்றும் இசையமைத்த பரத்வாஜ் ஆகியோருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். செஞ்சிக்கோட்டையும் தேசிங்கு ராஜனையும் குறிப்பிட்டு, அந்த இடத்தில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல் என்றும் நிலைத்திருக்கும் என்றும் கூறினார். பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்றில்லை என்பதையே இப்போது அதிகமாக உணர்கிறேன் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading