இயக்குநர் விஷ்னு வர்தன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘பில்லா’ திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘பில்லா 2’ என்ற தொடர்ச்சிப் படத்திலும் அஜித் நடித்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ‘பில்லா’ திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் மே 1 ஆம் தேதி இப்படம் மறுவெளியீடாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம், அமிதாப் பச்சன் நடித்த ‘டான்’ படத்தின் தழுவலாக உருவாக்கப்பட்டது. அந்த ‘டான்’ படத்தை ரஜினிகாந்த் ‘பில்லா’ என்ற பெயரில் மறுபடியும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அஜித்தின் ‘பில்லா’ திரைப்படமும் சில மாற்றங்களுடன் புதுமையாக உருவாக்கப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
