2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன், அனிருத், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் தங்களது ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றி வாக்களித்தனர்.
சென்னை நகரம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த தேர்தலில் திரைத்துறையைச் சேர்ந்த பலர் அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, அருண் விஜய், விஷால், யோகி பாபு, பிரதீப் ரங்கநாதன், சசிகுமார், கௌதம் ராம் கார்த்திக், ஜெய், துருவ் விக்ரம், ஆர்.ஜே. பாலாஜி, அருண் விஜய், அட்லி, அமீர், சுந்தர் சி, சித்ரா லட்சுமணன், சிவி குமார், சிவகுமார், அசோக் செல்வன், சூரி, விஜய் ஆண்டனி, ராஜகுமாரன், அதர்வா, உறியடி விஜயகுமார், ஜி.வி. பிரகாஷ், கவின், இயக்குநர்கள் வசந்த் மற்றும் வசந்தபாலன், இசைஞானி இளையராஜா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஜீவா, பிரசன்னா, சந்தானம், ஹர்ஷத் கான், இயக்குநர் பார்த்திபன் ஆகியோருடன் நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ஸ்ருதி ஹாசன், சினேகா, ராதிகா சரத்குமார், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
—
