Advertisement

மகள் மீராவின் மறைவுக்குப் பிறகு விஜய் ஆண்டனி எடுத்த முடிவு…மேடையில் கண்ணீருடன் பகிர்ந்த பாத்திமா!

மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ராணி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அப்பாகுட்டி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இப்படம் நவம்பர் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த விழாவில், விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். மகள் மீராவின் மறைவுக்குப் பிறகு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த அவர், மேடையில் கண்ணீருடன் பேசியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அப்போது, விஜய் ஆண்டனி இதுவரை வெளியில் பகிராத ஒரு விஷயத்தை பாத்திமா தெரிவித்தார். “மூத்த மகள் மீரா இறப்பதற்கு முன்பு, அவள் கல்லூரிக்குச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட செருப்புகள் மற்றும் ஷூக்களை வாங்கி வைத்திருந்தோம். ஆனால், அவள் மறைந்தபோது செருப்பு இல்லாமல் அனுப்பினோம். அதைப் பார்த்த விஜய் ஆண்டனி, அன்று முதல் வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியப் போவதில்லை என்று முடிவெடுத்தார். இசை நிகழ்ச்சிகளின்போது மட்டும் வேறு வழியின்றி அணிவார். நிகழ்ச்சி முடிந்ததும் கழற்றிவிடுவார். வெளிநாடுகளுக்குச் சென்றாலும் செருப்பு அணியாமல் நடப்பார்” என்று உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

Add a Comment

Leave a Reply