ரீ ரிலீஸான விஜய்யின் சிவகாசி மற்றும் அஜித்தின் அமர்க்களம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் விஜய் மற்றும் அஜித் இருவரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர்கள். சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு விஜய் சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகி, தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பாரா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் தெளிவாகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், அஜித் நடித்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படமும், விஜய் நடித்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘சிவகாசி’ திரைப்படமும் மீண்டும் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளன. இன்றைய புதிய படங்களை விடவும் இந்த இரண்டு படங்களுக்கே அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படங்கள் முதன்முதலில் வெளியான காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்களும், அப்போது பிறக்காதவர்களும் இன்று இளைஞர்களாக வளர்ந்து, இந்த படங்களை திரையரங்குகளில் நேரடியாக பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதனால், பழைய வெற்றிப்படங்களுக்கு மீண்டும் ஒரு புதிய வரவேற்பு உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading