தமிழ் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான் கான் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை, வம்சி பைடிபல்லி இயக்குகிறார். இவர் முன்னதாக வாரிசு திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய திரைப்படத்தை, பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பையில் பூஜையுடன் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அடுத்த ஆண்டில் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், சல்மான் கான் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் இந்த புதிய படத்தின் பூஜை நிகழ்ச்சி காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.
