‘ராம்’ திரைப்படம் என்ன ஆனது? மனம் திறந்த‌ இயக்குனர் ஜீத்து ஜோசப்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் த்ரிஷா நடித்த ராம் திரைப்படம், பண நெருக்கடி காரணமாக தற்போது நிறுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், இங்கிலாந்து, மொரோக்கோ மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், துனிசியாவில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

மெமரீஸ், டிரிஷ்யம், நேரு, நுணக்குழி போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் பாபநாசம் மற்றும் தம்பி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது, மோகன்லால் நடித்த டிரிஷ்யம் 3 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அவர் பேட்டிகள் வழங்கி வருகிறார்.

அதில் அவர் கூறுகையில், “ராம் படம் பண நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதிக முதலீட்டுடன் உருவாகும் இந்த படம் இவ்வாறு நின்றிருப்பது வருத்தமளிக்கிறது. தயாரிப்பாளர்கள் தான் அதன் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும். இந்த படம் ஒரு மனிதனின் உணர்ச்சி பயணத்தை மையமாகக் கொண்டது. அதேசமயம் சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன. இதனை இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டோம். இன்னும் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் சேர்த்து 50 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. அந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படம் நிறைவடையும்” என்று தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading