மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம் வருகிற மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். இதில் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் தற்போது சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ராணுவத்தை மையமாகக் கொண்ட கதையாதலால், அதிகாரிகள் சில காட்சிகளை நீக்கும்படி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் ஒரு அரசியல் நபரை நினைவூட்டுவதாக இருப்பதால் அதை மாற்றுமாறு கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், இந்த தகவலை மறுத்து ஆன்டோ ஜோசப், “சில சிறிய திருத்தங்களே கூறப்பட்டுள்ளன. அவை படத்தின் கதைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார்.
—
