ஆர்.ஜே.பாலாஜி – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மே 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால், இது சூர்யாவின் முழுமையான கமர்ஷியல் படமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும், இந்த படம் படையப்பா மற்றும் கில்லி போன்ற படங்களின் வரிசையில் அமையும் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
—
