கவின், லிப்ட், டாடா, ஸ்டார், பிளடி பெக்கர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தைத் தொடர்ந்து, தற்போது நயன்தாராவுடன் இணைந்து ஹாய் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், கவின் நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனரான பிரவீன் பரமசிவம் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை ஜெய்வர்தா தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் இணையும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—
