நந்தமூரி பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் தனது 111வது திரைப்படத்தில் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை விரிந்தி சினிமாஸ் தயாரிக்கிறது. ஆரம்பத்தில் இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாகும் பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் பின்னர் அதிக பொருட்செலவு காரணமாக, படத்தின் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு கதாநாயகியாக காஜல் அகர்வால் இணைவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னதாக நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் காஜல் அகர்வால் இணைந்து பகவந்த் கேசரி திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
—
