அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படம் 300 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 1048 கோடி வசூல் செய்தது.
இந்த படத்திற்கு பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் ராக்கா திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இதில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ராக்கா படத்தை முடித்த பின், ஷாருக்கான் நடிப்பில் ஜவான் 2 திரைப்படத்தை இயக்க அட்லி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, ஷாருக்கான் கிங் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன் பின்னர் ஜவான் 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
—
