‘மைசா’ படத்திற்காக தினமும் தீவிரமான உடற்பயிற்சியில் ரஷ்மிகா மந்தனா!

நடிகை ரஷ்மிகா மந்தனா, 2016ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துப் பான்-இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்ட அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகும் ‘மைசா’ திரைப்படத்தில், போர்வீராங்கனை போன்ற அதிரடி கதாபாத்திரத்தில் ரஷ்மிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்காக ரஷ்மிகா மந்தனா, பேங்காக்கில் தினமும் 8 மணி நேரம் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதைச் சார்ந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன. மேலும், இயக்குநர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து, “போர் என்பது காயங்களில் எழுதப்படுகிறது; அவள்தான் ஆயுதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading