ஹன்சிகா மோத்வானி தெலுங்கு திரைப்படங்களில் அல்லு அர்ஜூன் ஜோடியாக அறிமுகமானவர். 2007ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். தற்போது அவரது சினிமா பயணம் சற்றே மந்தமாக இருந்தாலும், அவ்வப்போது சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு சில காலத்திலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதன் விளைவாக கடந்த மார்ச் மாதம் அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கை குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய ஹன்சிகா மோத்வானி கூறியதாவது: “நடந்து முடிந்த விஷயங்களை பற்றி நான் வருந்தவில்லை. தவறான ரயிலில் ஏறியபின் அதில் தொடர்ந்து பயணம் செய்து துன்பப்படுவதற்குப் பதிலாக, அதிலிருந்து இறங்கி விடுவது தான் சரியான முடிவு. அதையே நான் எடுத்துள்ளேன். இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. என் குடும்பம் எந்த சூழலிலும் என்னை அழுத்தப்படுத்தவில்லை. இப்போதும் அவர்கள் எனக்கு முழு ஆதரவாக உள்ளனர். அதனால் நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
