திரையுலகில் ஆரம்பகாலத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்த நடிகை டெய்சி ஷா!

இந்தி திரைப்பட நடிகையான டெய்சி ஷா, தமிழில் ஜீவா நடித்த ‘பொறி’ மற்றும் அருண் விஜய் நடித்த ‘மலை மலை’ போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு தென்னிந்திய இயக்குநரால் சந்தித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “எனது திரைப்பட வாழ்க்கையின் தொடக்க கட்டத்தில், ஒரு தென்னிந்திய இயக்குநர் நடிகைகளைத் தேர்வு செய்வதற்காக மும்பைக்கு வந்திருந்தார். அவரைச் சந்திக்க நாங்கள் ஆறு முதல் ஏழு பெண்கள் சென்றிருந்தோம். அவர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். எனது நேரத்தில் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவர் என் கையைப் பிடித்தார். அது எனக்கு மிகவும் அசௌகரியமாகவும் விருப்பமற்றதாகவும் இருந்தது.

பொதுவாகவே, மற்றவர்கள் என்னைத் தொடுவது குறித்து எனக்கு எப்போதும் ஒரு வகையான அச்சம் உள்ளது. அதனால் தான் நான் மசாஜ் போன்றவற்றையும் தவிர்த்து விடுவேன். அந்த சம்பவம் எனக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவரிடம் ‘பிறகு தொடர்பு கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அதன் பிறகு அவரை ஒருபோதும் தொடர்புகொள்ளவில்லை,” என்று தெரிவித்துள்ளார். அந்த இயக்குநரின் பெயரை கேட்கப்பட்டபோதும், அதை வெளிப்படுத்த அவர் மறுத்துவிட்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading