முதல்வர் விஜய்‌ உடன் தனுஷ் படத்தை ரகசியமாக பார்த்த அனுபவம்… சுவாரஸ்ய நினைவை பகிர்ந்த பாடலாசிரியர் விவேக்

முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரைப் பற்றிய சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை பாடலாசிரியர் விவேக் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அந்த நினைவுகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளன.

அந்தப் பேட்டியில் விவேக் கூறுகையில், தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்தேன், மறுநாள் முதல்வர் விஜய்யை சந்தித்தபோது அதைப் பற்றி கேட்டார்.அப்போது, “எப்போ படம் போய் பார்த்த? என்னையும் கூட்டிக்கிட்டு போயிருக்கலாமே!” என்று விஜய் நகைச்சுவையாக கேட்டதாக அவர் நினைவுகூர்ந்தார். அதற்கு பாதுகாப்பு காரணங்களை நினைத்து, “உங்களுக்கு சிரமம் இருக்கும் சார்” என்று தான் பதிலளித்ததாக விவேக் கூறினார். ஆனால் அதற்கு விஜய், “அதெல்லாம் ஒன்றும் இல்லை… நீ டிக்கெட் மட்டும் புக் பண்ணு” என்று வற்புறுத்தியதாகவும், பிறகு மகேஷ் பாபுவின் AMB மால் திரையரங்கில் இருவரும் தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்து யாருக்கும் தெரியாமல் திரைப்படத்தை பார்த்ததாகவும் கூறினார்.

அதேபோல் படம் முடிந்ததும், நடிகர் தனுஷுக்கு விஜய் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு, “படம் ரொம்ப நல்லா இருக்கு… அருமையாக பண்ணியிருக்கீங்க” என்று பாராட்டியதாக விவேக் பகிர்ந்துள்ளார். முதல்வர் விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறையும், சக நடிகர்களின் படைப்புகளை பாராட்டும் பழக்கமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading