உண்மையாக உழைத்தால் இதுபோன்ற விஷயங்கள் நடைபெற வாய்ப்பு இல்லை… நடிகை ஹன்சிகா OPEN TALK!

ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். அவர் கடந்த 2022ஆம் ஆண்டு தொழிலதிபரான சோஹைல் கட்டாரியா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டனர்.

இதன் மூலம் அவர்களின் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கை நிறைவுக்கு வந்தது. தற்போது ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டு வரும் ஹன்சிகா, விரைவில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம், சினிமா துறையில் ‘காஸ்டிங் கவுச்’ என்ற பெயரில் நடைபெறும் சில தவறான வழிமுறைகள் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உண்மையாக உழைத்தால் இத்தகைய விஷயங்கள் நடைபெற வாய்ப்பே இல்லை. எனக்கு அந்த மாதிரியான அனுபவம் எதுவும் இல்லை. மேலும், சினிமாவில் இப்படியான பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்து எனக்கு தெளிவான தகவல் இல்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், பல நடிகைகள் இதுகுறித்து புகார்கள் அளித்து வருகிறார்கள் என்ற கேள்விக்கு, “அதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க முடியாது, ஏனெனில் எனக்கு அதுகுறித்து தெரியாது” என்று பதிலளித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading