தமிழ் சினிமாவில் நான் நடித்திருப்பது எனக்கு பெருமையான விஷயம்… நடிகை கெட்டிகா சர்மா!

கெட்டிகா சர்மா ‘ராபின்ஹூட்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அதி தான் சர்ப்ரைஸ்…’ என்ற பாடலில் மல்லிகைப்பூ அலங்காரத்துடன் அவர் ஆடிய நடனம் ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்தது. அந்த ஒரு பாடலின் மூலம் பரவலாக பேசப்பட்ட அவர், தற்போது எங்கு சென்றாலும் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் மூலம் கெட்டிகா சர்மா தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆரா பத்துக்கு பத்து…’ என்ற பாடலில் அவர் ஆடிய நடன அசைவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.

இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், தமிழ் சினிமா ரசிகர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் மொழி வேறுபாடு பாராமல் திறமையான கலைஞர்களை கொண்டாடும் தன்மை கொண்டவர்கள். தமிழ் சினிமாவில் நான் நடித்திருப்பது எனக்கு பெருமையான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading