‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில், கங்கை அமரன் மற்றும் நடிகர் சிவாஜியின் பேரனாகவும், ராம்குமாரின் இரண்டாவது மகனாகவும் இருக்கும் தர்ஷன் கணேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’ ஆகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.

இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம், மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் ஒரு காவலரின் கதையை மையமாகக் கொண்டுள்ளது. இந்த டிரெய்லரை கங்கை அமரனின் மகனும் இயக்குநருமான வெங்கட் பிரபு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading