‘ராமாயணம்’ எனும் உலகப் புகழ்பெற்ற புராண காவியத்தை சர்வதேச அளவில் வெளியிடும் நோக்கில், இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சினிமாகான் 2026 விழாவில் இப்படக் குழுவினரான நடிகரும் இணை தயாரிப்பாளருமான யஷ் மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரி கலந்து கொண்டனர். அப்போது ஹாலிவுட் ஊடகங்களுடன் கலந்துரையாடிய யஷ், இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் தனது கதாபாத்திரமான ராவணனுக்கும், ராமராக நடித்துள்ள ரன்பீர் கபூருக்கும் இடையே எந்த இணைப்பு காட்சிகளும் இடம்பெறவில்லை. அவர்கள் இருவரும் ஒரே காட்சியிலும் இணைந்து நடிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திரைப்படம் ராவணனுக்கும் ராமருக்கும் தனித்தனியான ராஜ்யங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் முதல் பாகத்தில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை. இரண்டாம் பாகத்தில்தான் ராமர் மற்றும் ராவணன் மோதிக்கொள்ளும் முக்கிய காட்சிகள் இடம்பெறுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சீதையாக சாய் பல்லவி நடித்துள்ள இந்தப் படத்தில் சன்னி தியோல், விவேக் ஓபராய், ரவி துபே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
—
