‘மார்கோ’ திரைப்படத்திற்குப் பிறகு, தயாரிப்பாளர் ஷரீப் முகமது தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘காட்டாளன்’ ஆகும். இந்தப் படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். இதில் நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் நடிகை துஷாரா விஜயன் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார். யானை தந்தம் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சுனில், ஜகதீஷ் மற்றும் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஹிப்ஸ்டர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘காந்தாரா’ திரைப்படத்திற்கு இசையமைத்து பாராட்டுகளை பெற்ற இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், இந்த ‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. தற்போது, இந்தப் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
—
