தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகா மோத்வானி, 2022ஆம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சில காலம் இணைந்து வாழ்ந்த அவர்கள், கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் ஹன்சிகா தனது கணவருடன் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளார். இதையடுத்து, அவர் பல கோவில்களுக்கு சென்று வருவது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. வடஇந்திய கோவில்களைத் தொடர்ந்து, தென் இந்திய கோவில்களுக்கும் அவர் வருகை தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சமீபத்தில் ரசிகர்களுடன் நடந்த கலந்துரையாடலில், “இப்போது நான் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறேன். தனிமை எனக்கு எப்போதும் பிடிக்கும். தற்போது அந்த தனிமையில் மகிழ்ச்சியும் கலந்துள்ளது. எனக்குப் பிடித்த விஷயங்களில் நேரத்தை செலவிடுவதும், எனக்கானவர்களுடன் இருக்குவதும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
—
