பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, தெலுங்கில் நடித்த ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ஹிந்தியில் நடித்த ‘வார் 2’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாத நிலையில், தற்போது தனது அடுத்த கட்ட பயணமாக கன்னட திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் அவர் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். பெண் இயக்குநர் இயக்கும் இப்படம் ஆரம்பத்திலிருந்தே வெளியான கிளிம்ப்ஸ் காட்சிகள் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், நடிகர் யஷ்ஷுடன் இணைந்து நடித்த ஒரு நெருக்கமான காட்சி தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதன் பின்னர், அந்தக் காட்சியை திரைப்படத்திலிருந்து நீக்குமாறு இயக்குநரிடம் கியாரா அத்வானி வலியுறுத்தி வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படப்பிடிப்பு நடைபெற்றபோது அந்தக் காட்சியில் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடித்திருந்தாலும், தற்போது அந்தக் காட்சி வெளியாகும் போது தனது திரைபட இமேஜுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்தக் காட்சியை நீக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
—
