‘கருப்பு’ – சூர்யாவின் எமோஷன் மற்றும் நகைச்சுவை கலந்த மாஸ் திரைப்படம்… ஆர்.ஜே.பாலாஜி டாக்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்த படத்தில் த்ரிஷா, சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை ஒட்டி ஆர்.ஜே. பாலாஜி அளித்த பேட்டியில் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், தனது படங்களுக்கு எப்போதும் குடும்ப ரசிகர்களின் ஆதரவு முக்கியமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். சூர்யாவை ரசிகர்கள் எவ்வாறு ரசிக்க விரும்புகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, ஒரு ரசிகனாகவே இந்த படத்தை உருவாக்கியதாக கூறினார். ‘கருப்பு’ படத்தில் சூர்யா நகைச்சுவை கலந்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்றும், இவ்வாறான தோற்றத்தில் அவரை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற சீரியஸான திரைப்படங்களில் நடித்திருந்த சூர்யாவின் படத்தை, தனது பாணியில் உருவாக்கியுள்ளதாக கூறினார். இந்த படத்தில் உணர்ச்சி மற்றும் நகைச்சுவை ஆகிய இரண்டிலும் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading