உண்மையில் அன்பு என்பது அமைதியான ஒரு வலிமை… அன்பு குறித்து தத்துவம் சொன்ன நடிகை ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரையுலகில் தனது நடிப்பின் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள நடிகை ரெஜினா கசாண்ட்ரா, அன்பு குறித்த தனது சிந்தனைகளை பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த பதிவில், “புதிய நாள் வந்தாலும் நான் அதே மனிதராகவே இருக்கிறேன். அன்பிற்கு நான் முழுமையாக சரணடைகிறேன். விஷயங்கள் தன்னிச்சையாக நடைபெற அனுமதிப்பதை பலர் பலவீனமாக எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் அன்பு என்பது அமைதியான ஒரு வலிமை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களுக்காக புன்னகையுடன் எழுந்திருக்க வேண்டும். நீங்கள் அன்பு செய்யப்பட தகுதியானவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நேசிப்பதிலும் நேசிக்கப்படுவதிலும் இருக்கும் மகிழ்ச்சியை நாம் உணர்வதற்குக் காரணம், அதை இழப்பதில் இருக்கும் வலியை நாம் அறிந்திருப்பதால்தான்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading