‘கர’ படத்திற்கு மமிதா பைஜூவை தேர்வு செய்ய காரணம் என்ன? இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன தகவல்!

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கர’ ஆகும். ‘போர் தொழில்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், 1990களில் ராமநாதபுரம் பகுதியில் நடந்த வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள இந்த படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இந்தப் படத்தில் மமிதா பைஜு தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது, “நடிகர் அல்லது நடிகை தேர்வு செய்யப்படும் போது, அவர்கள் எந்த மொழி அல்லது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அவர்களின் நடிப்பு திறன், சந்தை மதிப்பு மற்றும் குறிப்பாக அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ப பொருந்துகிறார்களா என்பதுதான் முக்கியம்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்திற்காக 20 முதல் 25 பேர் வரை ஆடிஷன் நடத்தப்பட்டதாகவும், அதில் மமிதா பைஜுவின் நடிப்பு திறன், உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தன்மை ஆகியவை தெளிவாக முன்னிலை பெற்றதாகவும் அவர் விளக்கியுள்ளார். இதன் மூலம், நடிகர் தேர்வில் திறமை மற்றும் பொருத்தம் முக்கியமானவை என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading